Wednesday, January 5, 2011

பெண் டாக்டருக்கு போலீஸ் கமிஷ்னர் ஆபாச எஸ்.எம்.எஸ்

இந்த உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டரை காலைல ஆரம்பிச்சு மதியம் வரை ஒரு சானல் ஒளிபரப்ப விதியில்லாம மற்ற சானல்ஸும் ஃபாலோ பண்ண நமக்கு பயங்கர கடுப்பு.

இந்த பதிவை போடுவதன் உத்தேசம்:

ஆகா பாரீர் பெண் மருத்துவர் பட்ட வேதனைன்னு அனுதாபம் தேடுவதல்ல.

ஆகா பாரீர் ..பெண் டாக்டர் ஒருவரின் சதியில் சிக்கிய சிட்டி போலீஸ் கமிஷ்னர்னு புகார் சொல்வதுமல்ல

எனவே டெலிகிராம் பாஷைல சுருக்கமா மேட்டரை சொல்ட்டு என் கருத்தை ஆணித்தரமா சொல்றேன்.

எங்கே: ஆந்திரமானிலம், விஜயவாடா
பாத்திரங்கள்:
1.பெண் டாக்டர் ( ஃபெர்ட்டிலிட்டி சென்டர்)
2.சீதாராமாஞ்சனேயுலு , சிட்டி போலீஸ் கமிஷ்னர்

மேட்டர்:
டாக்டரம்மா போலிச் சாமியாருங்க ரேஞ்சுக்கு குழந்தை பாக்கியம் தர்ரதா அலப்பறை பண்ணி கியாரண்டி கொடுத்து நிறையவே பணம் புரட்டியிருக்காய்ங்க.
ஃபெர்ட்டிலிட்டி மேட்டர்ல பர்சண்டேஜ் ரெம்ப கம்மிங்கண்ணா. ஆனால் இந்தம்மா அதுல உள்ள ரிஸ்கை எல்லாம் சொல்லாம கியாரண்டி சிகிச்சைன்னு கல்லா கட்டியிருக்காய்ங்க. கடுப்பான சனம் போலீஸ் புகார் கொடுத்திருக்காய்ங்க. இதுல டாக்டரம்மாவுக்கு கணவனல்லாத வேற ஒரு பார்ட்டியோட லிங்க். அந்த மேட்டரையும் கமிஷ்னரே டாக்கிள் பண்ணியிருக்காரு.

கமிஷ்னரு ஷுகர் பாஷண்டு (அடங்கொய்யால உனக்கு ஷுகர் வராம இருந்திருந்தா இன்னம் ஆருக்கெல்லாம் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருப்பே.

இதுல இன்னொரு  ட்ராக் கூட இருக்கு அங்கன வல்லபனேனி வம்சின்னு   ஒரு  அரசியல்வாதி.அவரோட தூரத்து சொந்தம் இந்த டாக்டரம்மா. வம்சிக்கும், கமிஷ்னருக்கும் விரோதம் வேற இருக்கு.

இந்த நிலையில இவரு அந்தம்மாவுக்கு ஏடாகூடமான எஸ்.எம்.எஸ் எல்லாம் அனுப்பியிருக்காரு .எக்கச்சக்க கால்ஸ் வேற பண்ணியிருக்காரு.

ஏம்பா இப்படில்லாம் பண்ணேனு சானல் அதிபர் (இவர் கதை இன்னம் ஏடாகூடம் அதெல்லாம் பின்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.) கேட்க Game ,Trapனுட்டு பீலா விடறார் கமிஷ்னர்.


கமிஷ்னர் ஆஃபீஸுக்கு நான் போனப்ப நெட்டி முறிச்சு ரெம்ப டயர்டா இருக்கு மசாஜ் பண்ணிக்கனும்னு பக்கத்துல உள்ள ஆள்கிட்டே சொன்னாருனு டாக்டரம்மா சொல்றாய்ங்க.

இதை ஆக்சனோட சொன்னப்ப பாவம் பழனி விபூதிபை சானல் வியூயர்ஸுக்கு தரிசனம் தருது.

இந்த மேட்டர் 4 மாசமா நடந்திருக்கு. வேற ஒரு சானல் அதிபர் பஞ்சாயத்து பண்ணியிருக்காரு.

ஆனா இந்தம்மா டாணாவுக்கு போயி ஒரு கம்ப்ளெயிண்ட் கூட கொடுக்கலை.கேட்டா டைம் இல்லேங்கறாய்ங்க.

கமிஷ்னரோட ஃபோன்ல உள்ள சிம் இதுக்கு முந்தி அவர் வேலை செய்த ஊர்ல உபயோகிக்க கொடுக்கப்பட்ட சிம். ஆக்சுவலா இதை அடுத்து வர்ர அதிகாரிக்கு ஹேண்ட் ஓவர் பண்ணியிருக்கனும்.

ஆனால் பார்ட்டி அதை லவட்டிக்கிட்டு வந்ததில்லாம பில்லும் கட்ட காணோம்.இதான் ஹைலைட்.

பாவம் முதல்வர் டிஜிபியை விஜாரிக்க சொல்லியிருக்கேன் . ரிப்போர்ட் வந்ததும் நடவடிக்கைங்கறார்.

என்னோட கெஸ் என்னடான்னா:

அந்தம்மா எல்லாமே பரிமாறியிருக்கு. நம்மாளு அதெல்லாம் ச்சொம்மா டிப் மாதிரி .காசு கொடுன்னு ஆளனுப்பியிருக்காரு ரூ 15 லட்சம். இங்கனதான் பிரச்சினை ஆரம்பிச்சிருக்கு.

ஆதாரம்: சானல் காமிரா முன்னாடி அவிக பிஹேவியர்,பாடி லாங்குவேஜ்,முன்னுக்கு பின் முரணான பேச்சு.

என் கேள்வி ஒன்னுதான். இந்த ல...டா பஞ்சாயத்து காலைல இருந்து மதியம் வரை வருது. அதுலயும் லைவ். ஒரு போலீஸ் கமிஷ்னர் வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு காமிராமுன்னாடி அகட விகடமா பேசிக்கிட்டே இருக்காரு. சானல் காரவுக அந்தாளை ப்ரவோக் பண்ணி பேச வச்சிக்கிட்டிருக்காய்ங்க.

இதை பார்க்கிற பெண் குழந்தைகள் மனசுல என்ன ஓடும்? ஆண் குழந்தைகள் மனசுல என்ன ஓடும்? போலீஸுன்னா இன்னா மாதிரி இமேஜ் அவிக மனசுல பதியும்? லேடி டாக்டர்னா இப்படித்தான் இருப்பாய்ங்கனு நினைச்சுட்டா என்ன பண்றது?

காவல் துறை உருப்படனும்னா என் யோசனைகள் இதோ:


1.காவலர் தேர்வு என்பது போட்டியற்றதாகி விட வேண்டும். அதற்கு இப்போதுள்ள காவல் துறை அதிகாரிகள்,காவலர் எண்ணிக்கையை 3 மடங்காக்கி விடவேண்டும்.

2.காவலர் தேர்வு என்பது இயந்திரங்களால்,கணிணிகளால் ந்டத்தப்படவேண்டும்.

3.தேர்வான காவலர்களுக்கு விலை வாசியே தெரியவராத வகையில் அவர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தாருக்கும் தேவையான உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்,காப்பீடு,சேமிப்பு எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்பது அத்தியாவசிய,விபரீத சூழல்களில் மட்டுமே பயன் படவேண்டும்.(கிட்னாப்புக்குள்ளாதல் Etc.,)

4.காவலர்களின் உடல் நிலை,மன நிலை,பொருளாதார நிலை,(தாம்பத்திய வாழ்க்கை உட்பட) 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அன்னிய நாட்டு சேவை நிறுவனங்களால் பரிசீலிக்கப் படவேண்டும்

5.காவலர்களுக்கான பதவி உயர்வு,இடமாற்றம்,பணிமாற்றம்,விடுப்பு,சகலமும் கணிணிகளால் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலதிகாரிகளின் தயவை எதிர்ப்பார்க்கும் துரதிர்ஷ்டமான நிலை மாறவேண்டும்.(இவர்கள் மேலதிகாரிகளின் இம்சையால் மசாக்கிஸ்டுகளாகி, மக்கள் விஷயத்தில் வரும்போது சாடிஸ்டுகளாகி விடுகிறார்கள்.

6.எந்த அதிகாரியும்,எந்த காவலரும் எக்காரணம் கொண்டும் 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக்கூடாது.

7.அனைத்து மானில போலீஸ் துறையையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.((IAS & IPs, மாதிரி) நாடெங்கிலும் உலகத்தரத்தில் போலீஸ் குவார்ட்டர்ஸ் ,அவர்களின் பிள்ளைகள் படிப்புக்கான கல்வி நிலையங்கள்,ஹாஸ்டல்கள் கட்டப்பட வேண்டும்.பணிமாற்றம் என்பது அகில இந்திய அளவில் நடைபெறவேண்டும். பணிமாற்றம் என்பது காவலரை பாதிக்காத வண்ணம் நாடெங்கிலும் ஒரே பணிச்சூழல்,ஒரே விதி ஏற்படுத்த வேண்டும்

8.காவலன் என்பவன் மக்களுக்கு காவலனாக இருக்கும் வரை நாடு அவனுக்கு காவலாக இருக்க வேண்டும். அவன் அரசியல் விபச்சாரிகளின் தரகனாய் மாறிவிட்டால்............வேணாம் பாஸ் கெட்ட வார்த்தையெல்லாம் வருது நான் அம்பேல்