Friday, January 21, 2011

9வகை பெண்களும் - உடலுறவு விருப்பங்களும்

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்(தொடருக்குள் தொடர்)
இதுவரை 1 முதல் 6 வரை பாவங்கள் எப்படியிருந்தா என்ன பலனுன்னு பார்த்தோம். இப்போ 7 ஆம் பாவம். இது ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம்னு சொன்னேன். ஆனால் ஒன்னுங்கண்ணா இந்த 7 ஆம் பாவத்தை லக்னமா வச்சு பார்த்தா உங்க ஜாதகமே உங்க மனைவியோட ஜாதகமா மாறும். உங்க மனைவியோட ஜாதகத்துல 7 ஆம் பாவத்தை லக்னமா வச்சு பார்த்தா அது உங்க ஜாதகமா மாறும். (இதை ஆரூடலக்னம்னு கூட சொல்றாய்ங்க)

இந்த இடம் சுபபலமா இருக்கனும் இருந்தாத்தான்  ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் இத்யாதியெல்லாம் கரீட்டா அமையுங்கண்ணா.இங்கன உள்ள எல்லா கிரகங்களும் ஏழை பார்க்கும். ஏழில் உள்ள கிரகங்கள் எல்லாம் லக்னத்தை பார்க்கும்.

சில பேரு பொஞ்சாதி சரியில்லேன்னு புலம்புவாய்ங்க. சிலர் புருசன் சரியில்லைன்னு குமைவாய்ங்க. நெஜம் என்னடான்னா லக்னத்துல உள்ள கிரகங்கள் ஏழை பார்த்தும், ஏழில் உள்ள கிரகங்கள் லக்னத்தை பார்த்தும் கணவனை மனைவியோட ஜெராக்சாவும், மனைவியை கணவனோட ஜெராக்சாவும் மாத்திரும்.

அஸ்கு புஸ்கு.. நான் மாறவே இல்லையேன்னு ஆருனா அலட்டினா அவிக சம்சாரத்துக்கும் அவருக்கும் பொருத்தமே இல்லைனு அர்த்தம். எலி தரைக்கிழுக்க, தவளை தண்ணிக்கிழுக்க கணக்கா இருக்கிற தம்பதி கூட நாளடைவுல ஒரு சில மேட்டர்லயாச்சும் ஒத்துப்போறது இந்த மேட்டரால தான் ( லக்னம் - ஏழாமிடம் -ஒரு பாவத்தில் உள்ள கிரகங்களை அடுத்த பாவத்தில் உள்ள கிரகங்கள் பார்க்கிறது)

அந்த காலத்துலயாச்சும் புருசன் ஆஃபீஸ் கோயர், மனைவி ஹவுஸ் வைஃப்னு இருந்ததால கிரகங்களோட எஃபெக்ட் வெவ்வேறு தளங்களில் வேலை செய்திருக்கும். ஆனால் இப்ப ரெண்டு பேரும் ஆஃபீஸ் கோயர்ஸுங்கறதால ஒரே விதமான பிடிவாதம்,ஒரேவிதமான ஈகோ,ஒரே விதமான நோய்கள் கூட வர வாய்ப்பிருக்கு.

7ங்கறது கேந்திரஸ்தானம் இங்கன சுபகிரகங்கள் இருந்தா நல்லது.  லக்னாத் சுபர்கள் இருந்து அவிக நைசர்கிக பாபிகளா இருந்தா கில்மா ஒத்துமை இத்யாதியெல்லாம் சூப்பரா இருக்கும். ஆனால் அவிக( கணவன்/மனைவி ) பேஷண்டாயிரலாம் அல்லது சீக்கிரம் பிரிஞ்சுரலாம்.

இங்கே பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு விதி. அந்த பாவிகள்   லக்னாத் சுபர்களா இருந்தா பார்ட்னரோட குணம் ரஃப் அண்ட் டஃபா இருக்கும். கொஞ்சல் கூட தெருவெல்லாம் கேட்கும்.ஆனாலும் விஸ்வாசமா இருப்பாய்ங்க. மேலே மேலேன்னு என்கரேஜ் பண்ணுவாய்ங்க ( வாழ்க்கையில முன்னேறன்னு சொல்லவந்தேன்). உங்களுது டுபுக்கு ஜாதகமா இருந்தா நாக்குதள்ளிரும். பார்க்கிறவுக பாவம் மாட்டி முழுக்கிறான்பானு பேசிக்குவாய்ங்க. ஆனால் உங்களுக்கு ஒன்னும் பெருசா பிரச்சினையா தோனாது.

சுபர்கள் பாவிகள் வித்யாசம்:

இங்கன லக்னாத் பாபர்கள் இருந்தா ஹேட் அண்ட் லவ் மாதிரி ஒரு ரிலேஷன் ஷிப் இருக்கும் ஊடல் வரும். ஊடலுக்கு பின் கூடல் ரெம்பவே ருசிக்கும். வாழ்க்கையில எக்கனாமிக்கல் டெவலப்மென்ட் நல்லா இருக்கும். மேலே மேலேன்னு தூண்டிவுடுவாய்ங்க. ஊர்ல வேணம்னா உங்களை பாவம்னுவாய்ங்க. பட்  யு மே பி கம்ஃபர்ட்டபிள்.

இங்கன நைசர்கிக  சுபர்கள் இருந்தா பழைய சினிமாவுல வர்ர ஹீரோயின் கேரக்டர் மாதிரி இருப்பாய்ங்க. மனசுக்கு இதம்மா இருக்கும். ஆனால் முன்னேறனுங்கற துடிப்போ, முன்னேற தேவையான வேக்குவமோ, என்கரேஜ்மென்ட்டோ இருக்காது. இன்னம் சொல்லப்போனா ஊர்ல உங்களை கொடுத்துவச்சவுருனு பேசுவாய்ங்க. உங்களுக்கென்னவோ ஒரு வித போர்டம் இருக்கும்.

தப்பித்தவறி உங்களுக்கா ஐடியா வந்து பத்துரூபா சம்பாதிக்கலாம்னு துடிச்சாலும் " நமக்கென்னங்க குறைச்சல் .. கண் நிறைஞ்ச புருசன். தங்க விக்கிரகங்க மாதிரி குழந்தைகள்" னு வசனம் எல்லாம் கேட்க வேண்டி வரும்.


இங்கே எந்த கிரகம் வலிமை பெற்றிருந்தா என்ன மாதிரி வைஃப் அமைவாய்ங்கன்னு ஏற்கெனவே பலதாட்டி சொல்லியிருக்கேன். ( நாலஞ்சு கிரகங்கள் இருந்தா கூட அதுல எது சுட்டி -கெட்டின்னு கணக்கு போட்டு முடிவு பண்ணனுங்கோ) இப்ப அதையே கொஞ்சம் போல கில்மா மேட்டரையும் கலந்து தரேன்.

1.சூரிய பெண்கள்:
ஒல்லி, தேன் நிற கண்கள் , கூந்தல் செம்பட்டையா இருக்கலாம் ( ப்ளீச்/ஷாம்பூ
வாஷால  ஆனதில்லிங்கோ பை பர்த்) . மேட்டுப்பகுதியில அ ஹார்ட் ஆஃப் தி டவுன்ல அ ரிமோட் வில்லேஜ்ல வாசம். லேசா மாறு கண் அ பவர் கிளாஸ். இன்சோமினியா இருக்கலாம். ஒத்தை தலைவலி இருக்கலாம். இவிக மேட்டர்ல 1ங்கற நெம்பர் நிறைய கிராஸ் ஆகும். ஆட்  ரெப், சேல்ஸ் ரெப், சூப்பர் வைசர்,குவாலிட்டி இன்ஸ்பெக்டர் ,டீம் லீடர் ,லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல வேலைல இருக்கலாம்.அ குடும்பத்தார் இந்த வேலைகள்ள இருக்கலாம். கான்ஃபிடன்ட். சிலர் ஓவர் கான்ஃபிடன்டா இருப்பாய்ங்க. பல்,எலும்பு தொடர்பான பிரச்சினை இருக்கலாம். அப்பாக்கூட நல்ல இன்டிமசி இருக்கும். அரசியல் ஆர்வமிருக்கலாம். தான குணம், தட்டிக்கேட்கிற தில் இருக்கலாம். புகழ்ச்சிக்குமயங்குவாய்ங்க.

2.சந்திர பெண்கள்:
திடீர் திடீர்னு வெய்ட் போடுவாய்ங்க. திடீர் திடீர்னு ஒல்லியாவாங்க. ப்ராக்டிக்கல் விஷயங்களை விட மானசீக விஷயங்களுக்கு இம்பார்டன்ஸ் தருவாய்ங்க. பள்ளமான பகுதியில அ வடமேற்கு பகுதில வசிப்பாய்ங்க. ஜல சம்பந்தப்பட்ட ஏரியாவா கூட இருக்கலாம். எப்ப எத்தீனி பேரு எவ்ள நேரம் இருப்பாய்ங்கனு தெரியாத ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள ஏரியாவுல வசிக்கலாம். இவிக குடும்பத்தாரோட தொழில் கூட மேற்சொன்ன வகையறாவுல இருக்கலாம். வாட்டர்,அல்லது லிக்விட் தொடர்பான தொழில்ல இருக்கலாம். ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ். அடிக்கடி மனசு மாறுவாய்ங்க. ஊசலாடிட்டு இருப்பாய்ங்க. ஆனால் கமிட் ஆயிட்டா /உணர்ச்சி வசப்பட்டுட்டா ஸ்டிக் ஆன் ஆயிருவாய்ங்க. நுரையீரல்,மனம் தொடர்பான தொல்லைகள் இருக்கலாம். சிலருக்கு சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம் வரலாம். தாய்மை குணம் அதிகம். செல்லமா கண்டிப்பாய்ங்க. திட்டுவாய்ங்க.இவிக மேட்டர்ல 2ங்கற நெம்பர் நிறைய கிராஸ் ஆகும்.

3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர்  கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.

நல்ல  ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

நிதானம்,  லேசான  முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.

தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன  செவ் தொடர்பான  தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.

4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ  இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ  பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற  பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்


5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை.  நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல  யோசனை சொல்லுதல்,  நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற  நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.

6.சனி தொடர்பான பெண்கள்:
நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க.  எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல்  யூஸ் பண்ற  வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .


7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி  ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும்.  பெருமாள் மனைவி  பேரை கொண்டிருக்கலாம்  .ஜாதகர் + அவிக குடும்பம்  போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை  தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம்.  வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9.சுக்கிரன்  தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு  முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம்  பிராமண இளைஞர் ஒருத்தர்  இவிக ஃபேமிலி  ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி,  முத்துலட்சுமி தெரு
மேற்சொன்ன 9 வகை பெண்களின் உடலுறவு விருப்பங்களை அடுத்த பதிவுல பார்ப்போம். (
Post a Comment