Saturday, January 29, 2011

அக்கா மகளும் 11 ஆம் பாவமும்

அக்காமகள்னதுமே ஒரு ஜிலீர் உணர்ச்சி பரவும். இதுக்கு காரணம் அவள் முறைப்பொண்ணுங்கறதுதான். அக்கா மகளை கட்டனும்னா உங்க ஜாதகத்துல 11 ஆம் பாவம் சுபபலமா இருக்கனும். 11ங்கறது மூத்த சகோதர (சகோதிரி) ஸ்தானம். இந்த இடம் சுபபலமா இருந்தாதான் எல்டர் ப்ரதர்ஸ்,சிஸ்டர்ஸோட சுமுகமான உறவு இருக்கும் அப்பத்தானே அக்கா மகளை கட்டமுடியும்.

அக்கா மகளை வச்சு பாட்டு எழுதாத கவிஞரே இருக்கமாட்டாருனு நினைக்கிறேன். ஆனால் ஒன்னுங்கண்ணா நம்ம நாட்ல தலை முறைக்கு தலைமுறை உசரம்,ஃபிட்னெஸ், ப்ரெய்ன் பவர் எல்லாம் குறைஞ்சிக்கிட்டே போக காரணம் சாதீயமும்,ஒரே சாதிக்குள்ள கண்ணாலம் கட்டறதும்தேன்.

தாளி பால் கொடுக்கிற பசுவையே பத்து கி.மீ ஓட்டிக்கினு போயி ஜெர்சி காளையோட விந்துவை ஊசி மூலம் ஏத்திக்கிட்டு வர்ர சனம் மகளை மட்டும் ஒன்னுக்குள்ள ஒன்னுனு நெருங்கிய சொந்தத்துல கட்டிர்ராய்ங்க.

சந்திரபாபு என்.டி.ஆர் ட்ரஸ்ட் மூலமா நெருங்கிய சொந்தத்துல திருமணம் செய்த காரணமா வரக்கூடிய நோய்களுக்கு இலவச சிகிச்சை தர்ராரு. ஆனால் பாருங்க பாலகிருஷ்ணாவை சம்பந்தியாக்கிக்கிட்டாரு. இவிகளுக்கெல்லாம் மன சாட்சினு ஒன்னு கிடையவே கிடையாதோ என்னமோ?

நான் இந்த பதிவை போடுவதன் நோக்கம் ஆருக்கெல்லாம் அக்கா பொண்ணு பொஞ்சாதியாகும்னு சொல்றதுக்கில்லை சொம்மா கவர்ச்சிக்காக வச்ச தலைப்பு இது.

நம்ம சித்தாந்தமே வேற. எதிர்கால இந்தியன் சூப்பர் ஃபிசிக்,சூப்பர் உசரம், சூப்பர் ப்ரெய்ன் பவரோட இருக்கனும்னா எவனுமே எவளுமே தன் மதத்துல, தன் மானிலத்துல கண்ணாலமே கட்டக்கூடாது. குறைஞ்ச பட்சம் சொந்த சாதில கட்டவே கூடாது.  சொந்த பந்தத்துல பண்ணா ஆட்டம் க்ளோஸ்.  டேக் கேர்.

இனி ஜோசிய மேட்டருக்கு வரேன். ஜாதகத்துல லக்னம் முதலா (லக்னத்தோட சேர்த்து) க்ளாக் வைஸ் எண்ணும்போது 11 ஆவதா வர்ர ராசிதேன் லாப பாவம்.இங்கன கோண ஸ்தானாதிபதி (1-5-9) இருந்தா தூள். கேந்திராதிபதி இருந்தா (1-4-7-10)  குட். 6,8,12 ஸ்தானாதிபதிகளை தவிர இதர கிரகங்கள் இருந்தாலும் பெட்டர் தேன்.

இன் தி சேம் வே இந்த பாவாதிபதியும்  6,8,12 தவிர வேற எங்கயாச்சும் இருந்தா பெட்டர். அப்பத்தேன் மூத்த சகோதரஸ்தானம் பேர் சொல்லும். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு இப்ப பார்ப்போம்.

அண்ணனோ அக்காவோ காலாகாலத்துல கண்ணாலம் கட்டி நல்லபடியா வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்கனு வைங்க. அப்ப அப்பா  நாற்பதுவயசை க்ராஸ் பண்ணியிருப்பாரு.  (பின்யோக ஜாதகமா இருந்தா பீக்ஸ்டேஜ்ல இருப்பாரு ,முன் யோக ஜாதகமா இருந்தா ஓஞ்சுபோயிருப்பாரு) .சந்தோசத்துல உள்ளவுக அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தபார்ப்பாய்ங்க. இந்தவிதிப்படி சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கிற அண்ணனோ ,அக்காவோ உங்களையும் சந்தோசப்படுத்தப்பார்ப்பாய்ங்க. உங்க படிப்பு,வேலைமேட்டர்ல நல்லா என் கரேஜ் பண்ணுவாய்ங்க. காதல் மேட்டர்ல உதவலாம் அல்லது திருமண விஷயத்துல ஆர்வம் காட்டி அங்கே இங்கே வரன் தேடலாம்.

மேலும் அவிக சந்தோசமா வாழறதை பார்த்து உங்களுக்குள்ளயும் ஒரு வித ஏற்புத்தன்மை ஏற்பட்டிருக்கும் .அந்த நல்ல அதிர்வுகள்  உங்க மைண்டுக்கு  ட்ரான்ஸ்மிட் ஆகியிருக்கும். சைக்காலஜிஸ்டுங்க சொல்ற என்விரான்மென்ட் ஏற்படும்.

அட நாளைக்கு உங்க மத்தியில ( தம்பதி) சின்னதோ பெருசோ பிரச்சினை வந்தாலும் அவிக கிட்டே பகிர்ந்துக்கலாம். அல்லது அவிக கவுன்சிலிங் தரலாம்.இது ஒரு ஆங்கிள்.

11 ஐ ஜஸ்ட் லாபஸ்தானமா பார்த்தாலும் இந்த ஸ்தானம் நல்லாருந்தாதான் எது ஒன்னுத்துலயும்  லாபத்தை எதிர்பார்க்கலாம். லாபத்துல உள்ளவன் (கொள்ளை லாபத்துல உள்ளவனில்லிங்கோ -அந்த கேசெல்லாம் வேற -பின்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்) சந்தோசமா இருப்பான். சந்தோசப்படுத்த பார்ப்பான். உலகத்தையே சந்தோசப்படுத்தறவன் பொஞ்சாதிய சந்தோசப்படுத்தாம இருப்பானா என்ன?

நம்ம ஜாதகத்துல லாபஸ்தானாதிபதியே பாதகாதிபதியாயிட்டாரு. போல. என்னங்கடா இது ப்ளாக்ர்ங்கற இனத்தையே இழிவு படுத்தி எழுதியிருக்காய்ங்களேனு  விகடனை எரிப்போம் னு  ஐட்டம் போட்டேன்.மஸ்தா பேரு படிச்சாய்ங்களே கானி  ஆரும் கண்டுக்கிடலை. ஓட்டும் போடலை நீங்க நினைச்சா இப்ப கூட  இங்கேஅழுத்தி  இண்ட்லில  ஓட்டுப்போடலாம். ப்ளாகர்ஸோட எதிர்ப்பை  அவிகளுக்கு தெரிவிக்கலாம்


எம்.ஆர் ராதா ஒரு தாட்டி வெளி நாடு போனப்ப " என்னை இங்கே வரவிடக்கூடாதுன்னு பெட்டிஷன் போட்டவுங்களுக்கும் நன்றி" னு பேசினாரு.  அப்படியாக விகடனை எரிப்போம் பதிவுக்கு ஓட்டுப்போடாதவுகளுக்கும் சேர்த்துத்தேன் இந்த பதிவு..
Post a Comment