Saturday, October 30, 2010

விகடன் நிருபர் என்னை பேட்டி கண்டாரோச்!

என்னங்கடா இது நம்ம முருகேசனோட கொசுத்தொல்லை தாங்கமுடியாம விகடன்லருந்து நிருபரை அனுப்பிட்டாய்ங்களானு நினைச்சு இந்த பதிவை காண (அதாங்க படிக்க) வந்த உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரமாட்டேன். விகடன் நிறுவனம் நிருபரை என்னிடம் அனுப்பியது நிஜம்.அவர் பேட்டிகண்டது நிஜம். அதைப்பற்றித்தான் இந்தபதிவே

பீடிக்கட்டு,சிகரட் பாயிட்டு மேல வெளியிடறமாதிரி தமிழ் பத்திரிக்கைகள் மேலயும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டியது எத்தனை அவசியம்னு இந்த பதிவு சுட்டிக்காட்டும் .

பதிவுக்கு போகலாமா அதாங்க பதிவுக்கான மேட்டருக்கு ..

(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )

எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி,எங்கே வைத்து  கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் வெளியிடுவாய்ங்க போல .

தற்போது 43 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போ விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுக்கிறதில்லை.  அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்னுதான்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?

அய்யய்யோ இம்சை தாங்கமுடியலை. மேட்டருக்கு வாங்க முருகேசன் .. என்ன பேட்டி எதைப்பத்தி பேட்டி இதானே உங்க ஃபீலிங் வந்தே உட்டேன்

என் ப்ளாகை படிப்பவர்களுக்கு இந்தியாவை வல்லரசாக்க நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம்.

இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. ஆ..மா நாட்டுக்கு ரெம்ப  தேவைன்னுட்டு  கிடப்புல போட்டுட்டாய்ங்க

நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன்.

இந்த சமயத்தில் அன்றைய என் பொருளாதார நிலைமையையும் சொல்லிரனும். அந்த கம்பெனி கேசட்டோட விலை 31 ரூபானு ஞா. ஏதோ பூர்வீக வீட்டை வித்து லட்ச ரூபா காசு வந்த தைரியத்துல ஆப்பரேஷன் இந்தியா2000 ஐ நாடறிய செய்ய என்னென்னமோ பண்ணி தொலைச்சுட்டு சோத்துக்கே ததிங்கணத்தோம் போடற நேரம் அது.

மறுபடி ஒரு வாக்மேன் வாங்கி மறுபடி ஒரு கம்பெனி கேசட் வாங்கி பதிவு பண்ணி இன்னொரு பத்திரிக்கைக்கு அனுப்பற அளவுக்கு வசதியில்லாத ஒரே காரணத்தால கேசட்டை திருப்பி அனுப்பசொல்லி எம்.ஓ அனுப்பினேன்.

ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லை. இவிக அரசு இயந்திரத்தோட மெத்தனத்தை கிழிக்கிறாய்ங்க. கடுப்பாகி  காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது அந்த நாள்ள  ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்கள்ள  பட்டிருக்கு.

உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை.

நான் காந்தி தாத்தா  டைப்ல  (மொக்கை பென்சில் ஞா இருக்கா) என் கேசட்டை எனக்கு கொடுக்கிற வழியப்பாருங்கப்பானு பேசிட்டிருந்தேன்.

வெளிய போய் யாரோடவோ ஃபோன்ல பேசினாரு. அப்புறம் பந்தாவாய் ஆப்பரேஷன் இந்தியா 2000  பத்தி பேட்டியெல்லாம் எடுத்தார் .

அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! விகடன் க்ரூப் பத்திரிக்கைகளுக்கு தலா ஒரு இதழோட விற்பனை அதிகரிச்சிருக்கும்.

நான் தான் மடையன் மாதிரி வாங்கி வாங்கி பார்த்துக்கிட்டிருந்தேனே.. வருசம் 1999ங்கோ. அப்பாறம் எப்பனா என் பேட்டியை  கேப் ஃபில்லிங்ல போட்டு விட்டுட்டாய்ங்களா தெரியாது.

உங்கள்ள யாருக்காச்சும் தெரிஞ்சிருந்தா சொல்லுங்கண்ணா..