Thursday, October 21, 2010

ரஜினியும் (அய்யரும்) ஃபில்ட்டர் காஃபியும்

ரஜினி மேட்டர்ல என்னதான் அடக்கிவாசிக்கனும்னு நினைச்சாலும் ரஜினி பக்தர்கள் விடமாட்டாய்ங்கபோல. இன்னைக்கு "ரஜினி  எனும் அதிசயம்!- விவாதமும் விதண்டாவாதமும்!"  ங்கற பதிவு நம்ம கண்ணுல பட்டுது. ரெம்ப டீப்பா போகாம ஒரு வரி ரெண்டு வரி கமெண்டுல கதைய முடிச்சுர்ரண்ணே.

//என்டிடிவி – இந்துவில் ரஜினி எனும் அதிசயம்: சூப்பர் ஸ்டார் பவரா அல்லது அசுரத்தனமான மார்க்கெட்டிங்கா? //ங்கற தலைப்புல ஒரு டிஸ்கஷன் நடந்திருக்கு. அதை பார்ட்டி கிழிச்சிருக்காரு. இந்த வில்லங்கத்தனமான  டிஸ்கஷனே ஒரு அசுரத்தனமான மார்க்கெட்டிங்க் தான். எத்தனையோ நல்ல படம்லாம் வந்திருக்கு. அதுக்கெல்லாம் இப்படி ஒரு டிஸ்கஷ்ன் நடக்குமா? காது.

//இருக்கும்போது ஒரு விஷயத்தின் அருமை விளங்குவதே இல்லை// இந்த பாய்ண்டை நானே பல தடவை சொல்லியிருக்கேன். இந்த தாட்டி  ஒரே ஒரு வரியை  சேர்த்து சொல்றேன். ஏகத்துக்கு சிலும்பி அலம்பல் பண்ணும் சில தக்கை மேட்டருங்களால தான் //இருக்கும்போது ஒரு விஷயத்தின் அருமை விளங்குவதே இல்லை//. யந்திரனோட இரைச்சலால எத்தனையோ காற்றினிலே வரும் கீதங்கள் ரசிகர்கள் செவிகளை அடைய முடியாதே போயிருச்சுங்கண்ணா.

//எம்ஜிஆர் என்ற மனிதர் பிறப்பால் மலையாளத்தவராக இருந்தாலும், வளர்ப்பால், உணர்வால் ஒரு தமிழராகவே வாழ்ந்தார். தமிழர் திருநாளை மட்டுமே கொண்டாடினார், தமிழிலேயே எம்ஜி ராமச்சந்திரன் என்று கையெழுத்துப் போட்டார். அவரை மக்கள் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர வைத்துவிட்டனர்.//

எம்.ஜி.ஆர் புலி. அந்த புலியை பார்த்து எத்தினியோ நரிங்க சூடு போட்டுக்குச்சு. ஒரு ம....ரும் பேரலை.ஏண்டான்னா எம்சியாரு ஒன்னு அட்வான்ஸா ப்ளான் பண்ணி செய்துருக்கனும் அ அவருக்குள்ள ஒரு சின்சியாரிட்டி நெஜமாலுமே இருந்திருக்கனும்.

ரஜினி ஆந்திரா போனா என்.டி.ஆர், ஏ.என்.ஆர், கர்னாடகா போனா ராஜ்குமார், இங்கன வந்தா எம்சியார் சிவாஜி, மஹாராஷ்டிரா போனா பால் (பல் போன) தாக்கரேனு  அந்தர் பல்ட்டி அடிக்கிறாருங்களே அதையும் சொல்ல வேண்டியதுதானே..

//ஆனால் அறிவு ஜீவிகள் என்ற மக்கள் விரோத கூட்டமிருக்கிறதே… அது அவரை விமர்சனம் என்ற பெயரில் அவமானப்படுத்தியது கொஞ்சமல்ல. //

விமர்சனங்கற வார்த்தையையும் உபயோகிச்சுட்டு அப்பாறம்  அவமானப்
படுத்தியதுங்கற வார்த்தை எதுக்கு?

நாலு பேர் தூக்கிப்பிடிக்கறதாலயே அவிக விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவுக ஆயிருவாய்ங்களா என்ன?

//ரஜினி படங்களை ரஜினிக்காக மட்டுமே பார்க்கிறார்கள் ரசிகர்கள்//
அப்ப என்ன மயித்துக்கு ஐஸ்வர்யா ராயி, ஏ.ஆர் ரகுமானு ,ஷங்கருனு கூட்டு சேர்ரது, என்ன மயித்துக்கு சன் பிக்சர்ஸ் ஷூவை நக்கறது?

பேசாம ஸ்ரீராகவேந்திரர்,வள்ளினு எடுத்துக்கிட்டே இருக்க வேண்டியதுதானே. சினிமாங்கறதே டீம் ஒர்க் பாஸ்.

ஆனந்த விகடன்ல  நம்ம கண்களை ஐஸ்வர்யாவை விட்டு ரஜினி பக்கம் திருப்பவே முடியலைனு விமர்சனம் எழுதியிருக்காய்ங்களே.. அதுக்கும் ஒரு பதிவு போடுவிங்களாண்ணா

//ஆனால் சாமியே இல்லாமல் வெற்றாக ஒரு கோயிலிருந்தால், விழா எடுத்தால்… யாராவது வருவார்களா?//

மசூதி,சர்ச்லல்லாம் இப்படித்தான் பண்றாங்கண்ணா.

//ஞாநி, சுதாங்கன் வகையறாக்கள் சாமியை விட்டுவிட்டு பூசாரியை பூஜிக்கிற மூடர்களைப் போலவே பேசுகிறார்கள். //

என்னங்கண்ணா படக்குனு ட்ராக் மாறிட்டிங்க ஐஸ்வர்யா ராயி, ஏ.ஆர் ரகுமானு ,ஷங்கரு,சன் பிக்சர்ஸையெல்லாம் ஒயிலாட்டம் ரேஞ்சுக்காச்சும் சொல்லிக்கிட்டிருந்து படக்குனு பூஜாரி ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டிங்க?

//ரஜினிக்கு எதிரான வயிற்றெரிச்சல் கோஷ்டியின் மொத்தப் பிரதிநிதிகளாகவே இந்த இருவரும் வந்திருந்தனர்.//

ரஜினிக்கும் எங்களுக்கும் வரப்பு தகராறு வாய்க்கா தகராறா இருக்கு.வயிறெரிய. மனுஷன்  நாசமா போறாரே, புலி மேல சவாரி பண்றாரே அந்த புலியே தின்னுரப்போகுதுங்கற பரிதாபம் தான் . மேலும் கூவற கழுதை மேயற கழுதைய கெடுத்த கணக்கா ஒரு லீடிங் பர்சனா இருந்துக்கிட்டு தானும் கெட்டு தன் பின்னால வரப்போற ஹீரோக்களையும்  படங்களையும் கெடுக்கறாரேனு ஒரு ஆதங்கம்

//சொந்தக் காசில் போய் யாராவது கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவற்றைச் செய்வார்களா? //

நிச்சயமா செய்வாய்ங்க. ( நானே மிட்டாய் இறைச்சிருக்கேன்) எதுவரை? 20 வயசு வரை, மிஞ்சிப்போனா 30 வயசுவரை. அரிசி,பருப்பு விலை தெரிஞ்சவன் தெரிஞ்ச பிற்பாடு செய்வானா? அப்படியும் செய்தா அவனுக்கு ஏதோ ஹிடன் அஜெண்டா இருக்குனு அர்த்தம்.

//பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கிவிட்டனவாம்.//
இல்லையா பின்னே. அன்னைய தேதிக்கு கலைப்புலி இன்டர் நேஷ்னல்ஸ் தான் கார்ப்போரேட் கம்பெனி. கலைப்புலி தாணு கொடுத்ததுதானே சூப்பற ஸ்டார் பட்டம்.

இதைப்பத்தி ஒரு பதிவே போட்டிருக்கேன் படிச்சு பாருங்க "ரஜினிக்கு ஒரு சவால்" ( ச்சொம்மா கூகுல்ல அடிச்சி தேடுங்க வாத்யாரே)


//ஆஹா, ரஜினியையே எதுத்துப் பேசறான் பாருய்யா” என்று பெயர் வாங்க நினைக்கும் அற்ப புத்தி இது.//

அய்யோ அய்யோ .. (வடிவேலு மாடுலேசன்)  இன்னைக்கு எதிர்ப்பு நாளைக்கே வீரலட்சுமிங்கறதெல்லாம் காமெடி பீஸு குரு! அதை போயி எதுக்கவேண்டியிருக்குதேனு வருத்தம் தேன்.

//முத்து, படையப்பாவின் வெற்றிக்கு காரணம் என ஒன்றைச் சொன்னார் பாருங்கள் அந்த ‘அஞ்ஞாநி’… உண்மையாகவே பக்கென்று சிரித்துவிட்டேன். அதுவும் மீனா, ரம்யா கிருஷ்ணனுக்காகத்தான் ஜப்பானின் அந்தப் படங்கள் ஓடின என்கிறாரே… இதைவிட முட்டாள்தனமான வாதம் இருக்க முடியுமா?//

பார்க்க: ஆனந்த விகடன் விமர்சனத்திலிருந்து நான் கொடுத்துள்ள குறிப்பை. ரஜினி என்னைக்காச்சு ஸ்டார் நைட் பண்ணியிருக்காரா? ரஜினியோட வீச்சு ஒரு விதம் .ரம்யா மீனாவோட வீச்சு ஒரு விதம் இதைத்தான் ஞானி சார் அனலைஸ் பண்ணியிருக்காரு

//இந்திய நாட்டின் பிரதமரே, ஜப்பான் நாடாளுமன்றத்தில் ரஜினியை வானளாவப் புகழ்ந்து, ‘இந்திய – ஜப்பானிய கலாச்சார உறவுக்குப் பாலம் எங்கள் நாட்டு ரஜினி’ என்று கூறினாரே, அதெல்லாம் இந்த அசட்டு ஆசாமிகளுக்குத் தெரியுமா..?//

யாரு.. நம்ம பிரதமரா .. கொஞ்சம் இருங்க வாய் விட்டு சிரிச்சிக்கிறேன். ஆந்திராவுல ஜகன் போர்கொடி தூக்கினதுமே சிரஞ்சீவிய கூப்டு சரண்டர் ஆன பார்ட்டிங்கப்பா.. நாளைக்கு என் கையில பத்து எம்.எல்.ஏ இருந்தா அ பத்து பேரை எம்.எல்.ஏ ஆக்கற சரிஸ்மா இருந்தா என்னையும் பாலம் ,ஓவர் பிரிட்ஜுனு சொல்லுவாய்ங்கப்பா. (சோகம் என்னடான்னா ரஜினியால  ஒரே ஒரு கவுன்சிலரை ஜெயிக்க வைக்கமுடியாது.. - அவரு பார்ட்டி வைக்க ஆத்துல ஒத்துக்க மாட்டாய்ங்களே..)

//நீலாம்பரியாக யாரும் நடிக்கலாம்… ஆனால் படையப்பாவாக ரஜினி மட்டுமே நடிக்க முடியும்//

ஆ...........மா படையப்பா தில்லானா மோகனாம்பாள் ஷண்முக சுந்தரம் மாதிரி ஒரு ஜீவனுள்ள படைப்பு. அதுல ரஜினி மட்டுமே நடிக்க முடியும்.

//இதே எந்திரன் ஓடாமல் போயிருந்தால்//

அப்படித்தானே தகவல்

//ஆனால் ரஜினி மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேல் உச்ச நடிகராகவே இருக்கிறார். //

தபார்ரா சில காலம் ராமராஜன் கூட டாப்புல இருந்தாருப்பா

உலக திரையுலகம் இருக்கட்டும்.. லோக்கலை பார்ப்போம்.

//வட இந்தியர்கள் ரஜினிக்கும் ஷங்கருக்கும் தலை வணங்குகிறார்கள்.//

அப்ப ஏங்கண்ணா  எந்திரன் இந்தி பட போஸ்டர்ல ரஜினி  மூஞ்சி என்ன  ,பேரை கூட போடலியாமே சன் பிக்சர்ஸ் காரவுக

//இந்த விவாதத்தின் முடிவில், “ரஜினி என்ற நட்சத்திரத்தின் பவர்தான் இன்றைய வெற்றிகளுக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை!” என்று கூறி எதிர்ப்பாளர்களின் முகத்தில் கரி பூசினார் தொகுப்பாளர் சஞ்சய்.//

இதுக்கு பேர்தாங்கண்ணா அசுரத்தனமான மார்க்கெட்டிங்

//எப்போதெல்லாம் ரஜினி பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதோ அப்போது டிஆர்பியும் கூடுகிறது.//

அண்ணா .. நான் இதுவரை 1,500 பதிவுகளுக்கு மேல எழுதியிருக்கேன் ஆனா லதாரஜினிகாந்தும் என் எதிரிகளும்ங்கற பதிவு தான் சூப்பர் ஹிட். இதுக்கு என்ன அர்த்தம்னா ரஜினிக்கு அந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்குனு அர்த்தம்

//அதுதான் ரஜினி சாரின் பவர்//

இல்லிங்கண்ணா ரஜினி சாருக்குள்ள எதிர்ப்புக்கான பவர்

//தமிழ்நாட்டையும் இரண்டு விஷயங்களையும் பிரிக்கவே முடியாது. அவை ஃபில்டர் காபி… ரஜினிகாந்த்!” என்றார் சஞ்சய்.//

ரஜினி காந்து சரிங்கண்ணா ( அவிக மார்க்கெட்டிங் உத்தேசமே அதான்) அதென்னா ஃபில்ட்டர் காபி ? அய்யரம்மாவை மணந்து மகளை மடில உட்கார்த்தி வச்சு தாரை வார்த்து கொடுத்ததால ரஜினியை அய்யராவே ஆக்கிட்டிங்களா?


படிக்கவும்: ரஜினி அய்யராத்து திருமணம்

அப்போ அவரோட குண்டி சூட்டை தாங்கி தூக்கி வச்சு ஆடின சூத்திரனுக்கெல்லாம்  அஸ்கு புஸ்குதானா?