Friday, May 14, 2010

கண்ணா நீ ஜெயிச்சுட்டே - 2

கண்ணா நீ ஜெயிச்சுட்டேங்கறதலைப்புல என் மகளோட காதல் கதைய பதிவா போட்டிருந்தேன். நான் ஏற்பாடு பண்ணி பையனா ( மகளோட லவர்) ஸ்டெடி பண்ண ஸ்டுடியோல ஒரு லட்சரூபாயை கொண்டாந்து போட்டுட்டு  டெய்லி ஆயிரம் ரெண்டாயிரம்னு லவட்டிட்டு போனான் பையனோட அப்பன் காரன்.

பையன் முழிச்சிக்கிட்டான். காபந்து பண்ண ஆரம்பிச்சான் அப்பன் காரனுக்கு கடுப்பாயிருச்சு. அடிச்சு விரட்டிட்டான். வழக்கமா என் மகள் தான் கடை சாவிய வீட்டுக்கு கொண்டுவருவா. அன்னைக்கும் அதே மாதிரி கொண்டு வந்தா.

அவன் அப்பன் காரன் எனக்கு ஃபோன் பண்ணி "கடை என்னுது பையன் வந்தா சாவி கொடுக்காதிங்கனு மிரட்டலா சொன்னான் (பழைய பஸ் ட்ரைவர் என்பதை ஞா படுத்திக்கொள்ளுங்கள்)

நான் அப்படியேன்னுட்டு  பையன் செல் இல்லாம, கால்ல செருப்பில்லாம, வண்டியில்லாம (எல்லாத்தயும் அப்பன் காரன் பிடுங்கிக்கிட்டான்) வந்தான்.நான் சாவிய தூக்கி கொடுத்து டோக்கன் அட்வான்ஸ்  நான் தான் கொடுத்தேன். பில்டிங் ஓனர் சாவிய என் கிட்டேதான் கொடுத்தார். நாந்தான் உனக்கு சாவிய கொடுத்தேன். இப்பவும் நான் தான் கொடுக்கிறேன். க்டையில நீ ஸ்டிடுடியோ நடத்தியிருக்கலாம் அதுல உங்கப்பன் முதல் போட்டிருக்கலாம் .ஆனா கடைக்கு நான் தான் பொறுப்பு .

இப்போ எப்படி என் கையில இருந்து  சாவிய  வாங்கறியோ அப்படியே என் கிட்டே கொடுக்கனும். அப்பன் கேட்டான் ஆட்டுக்குட்டி கேட்டுதுனு கொடுத்துட்டு வந்தா  நீ டம்மி பீஸுனு அர்த்தம். உங்கப்பன் வரமாட்டான் (போதை தெளிஞ்சிருக்கும். நம்ம சரித்திரம் ஞா வந்திட்டிருக்கும்) ஒரு வேளை வந்தான்னு வை " அது உன் வீடு. இது என் கடை . உன்னுதுன்னு எதுனா இருந்தா பொறுக்கிக்கினு ஓடி பூடு"ன்னு சொல்லு. எதுனா அலம்பல் பண்ணா ஒரு ஃபோன் போடுன்னு சொன்னேன்.

நாளிது வரை அப்பன் காரனை காணவில்லை. ஸ்டுடியோ பாட்டுக்கு ஓடிக்கிட்டிருக்கு. என் மகளை மட்டும் ஸ்டுடியோவுக்கு அனுப்பலை. அந்தாளூ பெரிய மன்ச தராவா ஃபோன் பண்ணி  "சார் கொஞ்ச நாளைக்கு பாப்பாவ க்டைக்கு அனுப்பாதிங்க. மத்ததெல்லாம் (கல்யாணம்) நாம பேசிக்கலாம்னு சொன்னதால கொஞ்ச நாளைக்கு  இந்த மரியாதை. அதுக்குள்ற அவன் விரையை  நசுக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன்.

அந்த டிக்கெட்டை எப்படிடா கட் பண்ணி விடறதுனு பார்த்துக்கிட்டிருந்தேன்.அந்தாளோட நன்மைக்குத்தான். பையன் ரா முழிச்சு ப்ரோக்ராம் கவர் பண்ணி, என் மகள் கண் எரிய கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து ஒர்க் பண்ணி சம்பாதிச்ச  காசை  லவட்டிக்கிட்டு போய் ரெண்டாவது பெண்டாட்டிக்கு அட்டிக்கை செய்து போட்டாகூட பரவாயில்லை. கண்டபடி குடிச்சு சாகறான். ஃபைனான்ஸ் கட்டானா ஒரு கட்டிங் குறைஞ்சா கூட ஒரு மாசம் அதிகம் வாழ்வானில்லையா?   (அந்த கண்ணனோட உண்மையான குரலை ஒலிக்க விட்டதால நன்றி கடனா கண்ணனே இந்த உதவிய செய்தாப்ல இருக்கு.

உபரியா என் மகளோட முயற்சில நம்ம லோக்கல் பேப்பர் 10 பக்கத்துல ஜோரா ரெடியாயிட்டிருக்கு. (ஃபோட்டோஷாப்ல டிசைனிங் கூட அவளே. ஏழாம் கிளாஸ் ரெண்டுதடவை குண்டு. எல்லாத்தயும் குன்ஸுலயே சமாளிச்சுருவா) .

மீடியா கம்யூனிகேஷனுக்குரிய கிரகம் புதன். புதனுக்குரிய கடவுள் கண்ணன். இப்ப சொல்லுங்க நான் எழுதிக்கிட்டிருக்கிற "பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி" என்ற தொடர் பதிவுக்கு கண்ணனோட ஆதரவு இருக்கா இல்லையா?

சரிங்கண்ணா பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி என்ற தொடர்பதிவின் லேட்டஸ்ட் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க