Tuesday, January 5, 2010

காலி டப்பாக்கள்

நான் ஏதோ நம் வலைப்பூவை கழிவறை சுவராக கருதி கமெண்ட் போடும் கத்துக்குட்டிகளை கண்டித்து இந்த பதிவை எழுதுவதாக நினைத்தால் ஏமாந்து போவீர்கள். நான் எழுத வந்தது உண்மையிலேயே காலி டப்பாக்கள் பற்றி. சில குடும்பங்களில் ஷாப்பிங் என்பது நேர்த்திக்கடன் மாதிரி. வாரா வாரமோ மாதாமாதமோ போய் தீருவார்கள். அவர்கள் புண்ணியாத்மாக்கள்.  ஷாப்பிங் செய்பவர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் சவால். இன்று வாங்கிய பொருளை நாளை திருப்பி தந்தால் கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி கொடுப்பார்களா ? என்றால் பெரியார் கடவுளை பற்றி சொன்னது போல்  இல்லை இல்லை இல்லவே இல்லை  என்றுதான் சொல்ல வேண்டும். பின்னே ஏன் வாங்குகிறோம் என்றால் ஒரே வார்த்தை தான் என் பதில் திமிர் அல்லது கொழுப்பு.

பின்னே எல்லா பொருளும் வீண்தானா என்றால் இல்லிங்க. பொருளாதாரத்துல அடிப்படை சூத்திரம்" Wants are unlimited But the sources are limited" இதற்கு "ஆசைகள் அளவில்லாதவை. பொருளாதார வளங்கள் அளவுக்குட்பட்டவை".  தேவைகளை ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு ஸ்தூல தேவைகள் ( இன்றியமையாதவை) ரெண்டு மானசிகமானவை. மானசிக தேவைகள் இல்லாமயும் வாழலாம். ஸ்தூல தேவைகள் இல்லாம வாழமுடியாது.

இதையே எக்கனாமிக்ஸ்ல எசன்ஷியல் கூட்ஸ் (ரயிலில்லிங்கண்ணா கூட்ஸுன்னா பொருள்னு அர்த்தம்) , கம்ப்ஃபர்டபிள் கூட்ஸ், லக்சரி கூட்ஸ்னு மூனு விதம் இருக்கு. ப்ளாக் அண்ட் வைட் போர்ட்டபிள் டி.வி எசன்ஷியல் கூட், கலர் டிவி கம்ஃபர்டபிள் கூட், பிளாஸ்மா டிவி ? லக்சரி கூட்.

வரவு எட்டணா செலவு பத்தணா பாட்டை கேட்காதவுக, சேகர் சினிமா பார்க்காதவுக, கேட்டும்,பார்த்தும் திருந்தாதவுக எல்லாம் பாபாத்மாங்க. அவிகளை ஓம்கார் ஸ்வாமிகள் கிட்டே அனுப்பிருவம்.

இந்த நாட்லயே  உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற ஒரே துறை விவசாயதுறைதான். அதுலதான் ஒரு கொட்டைய போட்டா நூறு கொட்டையா  வளருது. கால் நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் ஆஃப் தி ப்ராடக்டுதான். புல்லு பாலா மாறுது இல்லே கன்னுக்குட்டியா மாறுது.

இப்போ நானோ கார் மாதிரி மாருதி காருன்னு ஒன்னு வந்தது. சஞ்சய் காந்தி வேலை வெட்டியில்லாம இருக்காரு ஜெயபிரதாவ பார்த்தா தாவறாரேனு இந்திராகாந்தியம்மா ஜப்ப்பான்லருந்து ஸ்பேர் பார்ட்ஸ் வரவச்சு கார் தயாரிக்க (?) முடிவு செய்தாங்க. அந்த காரு வந்த புதுசுல அரை கிலோ மீட்டர் தூரத்துல லாரி வந்தா உடனே மாருதி  ட்ரைவர் வண்டியை  ஓரங்கட்டிருவாரு. என்னடா விசயம்னா டப்பா மாதிரியே இருக்கற காரு நிஜமாலுமே டப்பா ஆயிருமாம்.

தமிழ் நாடு போக்குவரத்து கழக பஸ்ஸுக்கும், ஆந்திர போக்குவரத்து கழக பஸ்ஸுக்கும் சின்ன வித்யாசமிருக்கு. த, நா.போ.க பஸ்ஸு எங்கனா  மோதிக்கிச்சுன்னா அப்பளம் தான். அதனோட மேக் அது மாதிரியாம். இதுவே ஆ.போ.க. பஸ்ஸு மோதினா சொட்டை கிட்டை எடுத்து மறுபடி ரோட் மேல விட்டுருவாங்க. அதனால தான் எங்க ஊரு சிவப்பு பஸ்ஸெல்லாம் சொட்டை சொட்டையா இருக்கு.

இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா அஞ்சு வருசம் முன்னாடி கூட பெங்களூர்ல யாரோ ஒருத்தர் ரூ.25 ஆயிரத்துல வீடு கட்டி காட்டினாரு. ஆனா ஒரு கோடிக்கு காரு விக்குது (தொண்டைல இல்லிங்கண்ணா கடைல)

இப்போ கச்சாமுச்சான்னு ஆக்சிடெண்ட் நடக்குது .பலரும் பல காரணம் சொல்றாங்க .என் சம்சயம் என்னடான்னா  பேங்கு காரன் கடன் தரான்னு ஆத்தமாட்டாத காரு வாங்கற பார்ட்டிங்க ட்ரைவரை வச்சுக்க மனசு வராம தாங்களே ஓட்டிதான் சாகறாங்களான்னு.

ஆக ஒரு  பொருளை வாங்கறதுன்னா கல்யாணம் கட்டிக்கிற மாதிரி. பெண்டாட்டிக்கு ஷாபிங்க் போக பணம் தரனும் வாங்கின பொருளை மெயிண்டெயின் பண்ணனும். டூ வீலர் வாங்கிர்ரானுங்க. ஃப்ரீ சர்வீஸ் இருக்கிற வரை பக்கா சர்வீஸ்தான். காசு கொடுத்து பண்ணனும்னா மாத்திரம் வலிக்கும்.

நிறைய வீட்ல பார்க்கலாம். டூ இன் ஒன் வாங்கனதுமே டேப்ரிக்கார்டர் பரணக்கு போயிரும். கலர் டிவி வாங்கினதுமே ப்ளாக் அண்ட் வைட் பரணைக்கு போயிரும். இல்லே எக்சேஞ்ச் ஆஃபர் வந்தா  99 ரூபாய்க்கோ 100 ரூபாய்க்கோ அதை கடைகாரன் வாய்ல போட்டுட்டு கலர் டி வி வாங்கிட்டுவந்து வீட்ல வச்சுருவானுங்க. டிவிடி வாங்கிட்டா டிஷ் ஒயரை செருக கூட ஆளில்லாம கிடக்கும்.

பணம் என்ன செடில காய்க்குதா. உன் பணம் என் பணம்னுல்லாம் கிடையாது. எல்லா பணமும் ஒரு வகைல நம்ம எல்லாரோட பணம்தான். அம்பானி நூத்தி சில்லறை கோடில வீடு கட்டறான்னா என்ன அர்த்தம் ? அது என்ன திருபாய் அம்பானி வச்சுட்டு போன பணமா ? இல்லே நேத்து நம்ம கிட்ட ஒழிச்ச பணமா இருக்கும், இல்லே நாளைக்கு ஒழிச்சு தரப்போறான்னு பேங்க் காரன் கொடுத்த பணமா இருக்கும்.

வீடே கக்கூஸ் சைஸுக்கு இருக்கும். இதுல மாமனார் தரானேன்னு ரெட்டை கட்டில் வாங்கி போட்டுக்குவான். "அது"ல தேஞ்சதோட முட்டி அடிப்பட்டும் தேயும். பெரியவங்க சிறுகக்கட்டி பெருக வாழ்னாங்க. அது இந்த அர்த்தத்துல இல்லே.

இதுவாச்சும் பரவால்ல. என் ஃப்ரெண்டு ஒருத்தன் கல்யாணமான புதுசுல தவணைல ஒரு ரெட்டை கட்டில் வாங்கினான். தவணை தேதி நெருங்க நெருங்க "எழுச்சியே" இல்லாம போயிருச்சாம்.  ஆண்மையின்மைக்கு மிக முக்கிய காரணம் வரவுக்கு மிஞ்சின செலவுதான். செக்ஸுக்கு செக்ஸுதான் பண்டமாற்று. செக்ஸின் போது மனைவி வேறேதும் இன்டென்ட் வச்சாள்னா உன் வேலை சரியில்லன்னு அர்த்தம். முதல்ல க்ளிட்டோரிஸ் எங்கே இருக்குனு தெரிஞ்சுக்க. அதை விட்டுட்டு " நாம சரியா செய்யலயோ"னு  புருஷன், இவன் , " இதை தான் சரியா செய்யல ஒரு ப்ளாஸ்மா டிவின்னா வாங்கி தரட்டும்னு மனைவி நினைச்சா அது காம சூத்திரத்தை உலகுக்கு தந்த  நம்ம தாய் திரு நாட்டுக்கே அவமானம்

சரி இதுக்கு மேலயும் இந்த குப்பைகளை பத்தி பேசினா கவிதை07க்கு தடை வந்தாலும் வந்துரும். உள்ளதை சொன்னா நொள்ள கண்ணிக்கு நோப்பாளம்னு நமக்கும் தெரியுங்கண்ணா.

அட இந்த கூட்ஸை கூட விட்டு தள்ளுங்க. இந்த ஜாமான் செட்டு போட்டு வருதே அந்த அட்டை பெட்டிங்களை பத்தி தான் இந்த பதிவுல பேசப்போறோம்.

1997ல ஒரு ப்ளாட்ல வேயப்பட்ட குடிசை வீட்ல குடியிருந்தேன். 2400 ஸ்கொயர் ஃபீட் மாடி வீட்ல இருந்து குடிசைக்கு ஏன் வந்தேன்னா அது மூனெழுத்து சமாச்சாரம் தான். இங்கிலீஷ்ல சொன்னா ரெண்டே எழுத்து அதாங்க லவ்வு.  பக்கத்து ப்ளாட்ல ஒரு வீடு . அது என் ஃப்ரெண்டுத்தான். அவனும்  அவன் பெண்டாட்டியும்  எம்ப்ளாயிஸா இருக்கப்போயி ஆத்த மாட்டாம கடனை உடனை வாங்கி பந்தாவாய் மொசைக்கெல்லாம் போட்டு வீடு கட்டிட்டான். கிருக ப்ரவேசம் தான் பண்ண முடியலை. அஞ்சு வட்டி கட்டற நிலைமை ஆயி ( அதில்லிங்கண்ணா ஆகினு படிங்க)  போச்சு இந்த எழவுல எங்கருந்து கிருக ப்ரவேசம் பட்டின ப்ரவேசம் பண்றது.  மேல கீழ பொத்திக்கிட்டு எவனோ ஃபீட் கடைகாரனுக்கு வாடகைக்கு கொடுத்துட்டான்.

அவங்க ஏதோ கிராமத்துல வாழ்ந்து கெட்ட குடும்பம் மாதிரி இருக்கு. நிலம் நீச்சுல பாதிய வித்துட்டு டவுனுக்கு வந்தவங்க. பெரிய பையன் அப்பாவுக்கு துணையா கடைக்கு போறான். சின்ன பையன் ஏதோ காம்படிட்டிவ் எக்ஸாமுக்கு ப்ரப்பேர் ஆகறான். ஒரு வயசு பெண். ( 1 வயசு இல்லிங்கண்ணா). ஏதோ பந்தாவுக்காக அந்த வீட்ல வாடகைக்கு சேர்ந்து கலர் டிவி, ஃப்ரிட்ஜுன்னு வாங்கிட்டாங்களே தவிர   அவிங்களுக்கு வேலைக்காரிய வச்சுக்கற அளவுக்கு வசதியில்லே. என் மனைவிக்கு அந்த மாதிரி வெத்து  வாழ்க்கைய எட்டிப்பார்க்க ஆசை.  அந்த வீட்டம்மாவுக்கு எங்க வாழ்க்கைய பார்த்தா எட்டாவது அதிசயத்தை பார்த்தாப்ல ஃபீலிங். கிட்டபார்க்கனும்னு எண்ணம் . சதா என் மனைவிய கூப்டுக்கிட்டே இருப்பாங்க. நான் "பார்த்துரி .. நாயக்கர் சாதில பிறந்தாலும் முதலியாரை கல்யாணம் பண்ணிக்கிட்டே ஃப்ரிட்ஜ் க்ரிட்ஜு துடைக்க வச்சுரப்போறா என்று  வெறுப்பேற்ற்வேன். வேலை வெட்டியில்லாத நேரத்துல  அந்த வீட்டுக்கு போய் பேசிக்கிட்டிருப்பா. வந்து கதை கதையா  சொல்லிக்கிட்டிருப்பா. நான் வழக்கமான கணன்மார் ஸ்டைல்ல முந்தா நேத்து பேப்பரை சீரியஸா படிக்கிறாப்ல பாவலா காட்டிக்கிட்டு கேட்டுக்கிட்டிருப்பேன்.(அது ஏங்க ஏழை நாயக்கர் பெண்கள் நிறைய பேரு வீட்டு வேலையே செய்றாங்க?பாப்பார பொண்ணுக மை டப்பா மாதிரி டப்பால தயிர் சோறு அடைச்சிட்டு போய் முன்னாடி எஸ்.டி.டி பூத்ல வேலை செய்தாங்க .இப்போ இன்டர் நெட் சென்டர், ஜெராக்ஸ்சென்டர்ல வேலை செய்றாங்க. சாதிக்கும் தொழிலுக்கும் என்ன சம்பந்தமிருக்கு ?)

என் மனைவியும் அந்த வீட்டம்மாவும் படிப்படியா க்ளோசாயிட்டாங்க. மண்ணுலகுல  நான் வாழ்ந்தது குடிசை தான் . ஆனால்  மனவுலகுல நாமதானே ராசாதிராசா. ஜோசியத்துக்கு வர்ரவுக கொண்டுவர வெத்தில பாக்கு தேங்கா பழம்லாம்  கொடுத்து விட்டுருவன். பெரிய மன்சங்க நமக்கு டைரி,காலண்டர், கால்குலேட்டருன்னு கொடுத்துக்கிட்டே இருப்பாங்க எத்தினி தான்  நாம யூஸ் பண்றது. அதனால் அந்த பக்கமும் தள்ளிவிடுவேன்.

அவங்களும் மிஞ்சி போன பிரியாணி , அது இதுனு ஆஃபர் பண்ணுவாங்க. என் மனைவி சாதி நாயக்கர் சாதியா இருந்தாலும் பார்க்க அய்யராத்து பொண்ணு மாதிரியே இருப்பாள். நமக்குதான் பக்கபலமா ப்ஞ்சாங்கமிருக்கே அதுனால ஏதோ ஒரு சாக்கு சொல்லி நைஸா ரெஃப்யூஸ் பண்ணிருவன்.

அப்ப அந்த குடிசை வீட்ல இருக்கிற சமயம் அடுப்புல தான் சமையல். அவிக வாரம் ஒரு தடவையாச்சும் ஷாபிங்க் போவாங்க. அவிக வாங்கின ஜாமானுங்கள் வந்த  அந்த காலி அட்டை பெட்டிகள் மாடிப்படி கீழே  அம்பாரமா குமிஞ்சி கிடக்கும். ஒரு நாள் மழை வர மாதிரி இருக்கவே அந்தம்மா என் மனைவிய கூப்டு " நீ அடுப்புல தான் சமைக்கிறே இதையெல்லாம் எடுத்துட்டு போ ..வென்னீர் போடவாவது உதவும்னு தானும் என் மனைவியுமா கொண்டு வந்து போட்டாங்க.

அந்த அட்டை பெட்டிகள்ளதான் எத்தனை வேலைப்பாடு. ப்ரிண்டிங்க்ல தான் என்னா மாதிரி ஃபினிஷிங்க். எத்தனை கலர் ,  லேமினேட் கூட  பண்ணியிருந்ததா ஞா. வடிவங்கள் தான் எத்தனை விதம். சதுரம், செவ்வகம் மட்டுமில்லே.  வட்ட வடிவம், க்ளேவர் வடிவம். இதுல பசங்க பொரி பொரியா பறக்க விடுவாகளே தெர்மா கோல் பேக்கிங்க் மெட்டீரியல் வேற. எங்கப்பன் மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாலும்  எந்த பில் மேலயும் பத்து சதம் லஞ்சம் வாங்கற வாய்ப்பு இருந்தாலும் ஹானஸ்டுன்ற ஒரே காரணத்துக்காக ஆந்திரால இருக்கிற எல்லா ஜில்லாலயும் வேலை பார்த்த பார்ட்டி. ரெண்டு சம்சாரம்.  அதாங்க அவரு வேலை செய்ற ஊர்ல அவரு பிரம்மச்சாரி குடித்தனம் ஒன்னு. இங்கே சம்சாரம்,பசங்களோட குடித்தனம் ஒன்னு. இதுல கூட்டு குடும்பம் வேற. 1967 ல பிறந்த எனக்கு 1991 வரை அப்பன் நிழலிலேயே வாழ்ந்திருந்தாலும், ஆறு வருசம் சொந்த கால்ல நின்னு வாழ்ந்திருந்தாலும் மார்க்கெட்ல அத்தினி விதமான ப்ராடக்ட் இருக்குனு தெரியவே தெரியாது.

ஒரு நோட்டு போட்டு அந்த ப்ராடக்டுகளோட பெயர்களை  ஒரு பட்டியலா  போட்டு வச்சிருந்தா அதை இந்த பதிவுல போட்டிருந்தா இந்தியா ஏன் இப்படி நாறுதுனு  நீங்களே தெரிஞ்சுக்கிட்டிருப்பிங்க.

ஒரு நாள் அந்த வீட்டம்மா ஜன்னல் கம்பிக்கு தூக்கு போட்டுக்கிட்டு செத்து போச்சு.