Thursday, December 3, 2009

உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்: 3

1..ஆண்மை குறையும்:
தொடர்ந்து உடலுறவு கொள்வதால் (இதை சுய இன்பத்துக்கு பொருத்தி பார்க்கவேண்டாம். அந்த ஸ்கூல் வேறு) ஆண்மை குறையும் என்பது சர்வ நிச்சயமாக மூட நம்பிக்கையே. இன்னும் சொல்லப்போனால் விரதம் அது இது என்று மாதக்கணக்கில் இடைவெளிவிடுவதால் தான் குறையும்.

ஆரோக்கியமான வாழ்வை கொண்டிருப்பவர்/திருமணத்திற்கு முன் காஞ்சானாக இல்லாமல் மாதம் ஒரு முறை /இரு முறை சுய இன்பம் /உடலுறவு கொண்டுவந்தவருக்கு உடலுறவுகளால் ஆண்மை குறையும் வாய்ப்போ கிடையாது. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.
ஜிம் சென்று பாடி பில்டப் செய்பவர்கள் என்ன செய்கிறார்கள் ? உடலின் உறுப்புகளுக்கு வேலை தருகிறார்கள். அதனால் தான் அந்த பகுதிகளுக்கு ரத்தம் பாய்கிறது. ரத்தக்குழாய்கள் விரிவடைகின்றன. அப்பகுதி வலுப்பெறுகிறது.

இதே விதி உடலின் இனப்பெருக்க மண்டலத்துக்கும் பொருந்தும். என்ன ஒரு வித்யாசம் என்றால் உடலுறவு என்பது ஆழமானதாக/டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படாது என்பதோடு, இறைக்கிற கேணிதான் ஊறும் என்பது போல் ஆண்மை பெருகும் .

ஏற்கெனவே முன் பதிவுகளில் சொன்னாற்போல் அவசர அடி, கள்ள அடிகளால் வெத்து ..லு நித்திரைக்கு கேடு என்ற நிலைதான் ஏற்படும். முக்கியமாக பெண்கள் உடலுறவின் பால் அலட்சியபாவம் கொண்டிருக்க காரணம் இந்த நுனிப்புல் மேய்தலும் , எடுத்தேன் கவித்தேன் தனமும்  தான். இதனால் பெண்ணுக்கும் பயனில்லை, ஆணுக்கு ஏதோ ஒரு வித ரிலீஃப் கிடைத்தது போலவே இருக்குமே தவிர குற்ற்மனப்பான்மை (அவளுக்கு ஏதும் உறைச்சாப்லயே இல்லயே ) , மீண்டும் ஒரு இன்னிங்ஸ் முயற்சிக்கலாமா என்ற எண்ணம். தப்பிதவறி அதில் தோற்றால் நிரந்தர ஆண்மையின்மையே கூட ஏற்பட்டு விடும்.

தொடர் உடலுறவுகளால் ஆண்மை குறையவும் வாய்ப்புண்டு. 
அதற்கு காரணம் சாதாரண ஆரோக்கிய சூத்திரங்களை கூட பின்பற்றாதது. இளைப்பாறவோ, விந்து ஊறவோ போதிய சமயம் தராது முயற்சிப்பது, எதிராளிக்கு விருப்பம் இல்லாத போதும் வீம்புக்கு முயல்வது இதெல்லாம் காலப்போக்கில் ஆண்மைக்கு வேட்டு வைக்கும் இது உறுதி.


உண்டவுடன் அதில் இறங்குவது தவறு.  (ஏற்கெனவே சொன்னது போல் ஜீரண மண்டலம் வேலை செய்யும்போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. ஒரு வேலை நின்றால் தான் அடுத்த வேலை துவங்கும். உண்ட வுடன் அதில் இறங்கினால் ஜீ.மண்டலம் வேலை நிறுத்தம் செய்யும் இதனால் அஜீர்ணம், அசிடிட்டி, பசியின்மை, வயிற்று வலி இத்யாதி ஏற்படும்)


செக்ஸ் பவர் என்பது ஜெனரல் பாடி பவர் மீதே ஆதாரப்பட்டுள்ளது எனவே சாதாரண ஆரோக்கிய சூத்திரங்களை பின் பற்றுவது கட்டாயம். தண்ணீர் நிறைய குடிப்பது, பசித்து உண்பது, போதிய சத்தான உணவு, தேவையான தூக்கம், தேவையான ஓய்வு, சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், உடல் சுத்தம், மனசுத்தம் (அதாங்க செக்ஸ் தொடர்பான டுபுக்குகளை நம்பாதிருத்தல்) எல்லாம் தேவை. இவற்றில் கோட்டை விட்டு அதே வேலையாய் இருந்தால் நாஸ்திதான்.

ஜோதிடம் தொடர்பான உண்மை:
இனப்பெருக்க மண்டலம், விந்து உற்பத்தி, செக்ஸ் பவர்,ஆர்வம் இதற்கெல்லாம அதிபதி சுக்கிரன். இவர் ஒவ்வொரு ராசிக்கும் வருடத்தின் சுமார் பத்து மாதங்கள் ஃபேவர். இரண்டு மாதங்கள் தான் அன் ஃபேவர். எனவே போட்டுத்தாக்குங்க. விசயம் தெரியாம சுக்கிரன் ராசிக்கு 3,10 ல இருக்கும்போது பெண்டாட்டி மேல பாஞ்சா நாஸ்தி தான். அதே போல சுக்கிரன் நீசம் பெறும்போதும் (கன்னியில்) யுத்த காரகனான செவ்வாய், நிழல் கிரகங்களான ராகு, கேது , பாவ கிரகங்களான சனி, சூரியன், ஆகியோருடன் சேரும்போது சமாச்சாரம் ரிவர்ஸ் அடிக்கும். டேக் கேர். பை தி பை சுக்கிரன் சந்திரனுடன் சேரும்போது அந்த விசயத்தில் புது புது கற்பனைகள் தோன்றும் . தூள் கிளப்பாலாம்

தொடர் உடலுறவுகளால் கவர்ச்சி குறையும்  ஞா சக்தி குறையும்  என்றும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இதெலாம் டுபுக்குதான். என்ன ஊரான் மனைவிக்காகவோ, ஊரான் பெண்ணுக்காகவோ ( அதாங்க காதல் ) ஜொள் விட்டு ஸ்கெட்ச் போடும்போது அந்த விசயத்துமேல கான்சன்ட்ரேஷன் அதிகமாகி மத்த விசயத்துல கோட்டடிச்சுருவிங்க (முக்கியமா பரீட்சை )

காது, ஜான்சன் பட்ஸ் இந்த இரண்டுக்கும் உள்ள உறவு தெரியும்.  காதுக்குள்ள எதையும் போட்டறியாத பார்ட்டி பட்ஸை அப்படி காட்டினா போதும் உடம்பே சிலிர்க்கும் .
அட் தி சேம் டைம் வேற ஒரு பார்ட்டி நூறு /இரு நூறு கொண்ட பட்ஸ் பாக்கெட்கை  பக்கத்ல வச்சிக்கிட்டு கையும் காதும் சும்மாதானே  இருக்குனு  போட்டுக்கிட்டே இருந்தா எண்ணாகும் ? அதே கதை தான் இதுலயும்.

டூ மச் ஈஸ் ஆல் வேஸ் பேட்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

புரியுதுங்களா ?:
Post a Comment