Saturday, August 18, 2007

ரஜினி‍,சுஜாதா,பாலா,ஆ.வி சந்தித்தால்


குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.

ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.

பாலகுமார‌ன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..

ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு

பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..

சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்

பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.

ரஜினி: வாங்க மிஸ்ட‌ர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...

பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே

சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..

ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?

சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?

ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி

பாலா: யம்மாவா..

ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல‌

சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.

ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்ன‌து அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?

பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.

ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....

ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?

ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்

ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?

ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து

ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..

ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு

ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே

ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க

ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..

ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..

ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?

ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?

சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்

ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?

ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!

பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி

ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?

பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!

சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்

ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்

ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே

ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..

ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்

சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்

பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..

ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மக‌ளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா

ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே

ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.

சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..

ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்க‌ளாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்க‌ளாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.